• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகிய காவிரி குடிநீர்

ByAnandakumar

Apr 14, 2025

குளித்தலை அருகே கோட்டமேடு வாய்க்கால் பாலம் வழியாக குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது.

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறைக்கு தமிழ்நாடு வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று கோட்டமேடு வடிகால் வாய்க்கால் பாலம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 அடி தூரத்திற்கு நீர் பீறிட்டு அடித்தது.

இதனால் லட்சக்கணக்கான குடிநீர் வடிகால் வாய்க்காலில் கலந்து வீணாகி போனாது.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த, பழைய குழாயை மாற்றி, புதிய குழாயை மாற்றி விட்டு, வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.