குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்துபொருள் (மு.வ):ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.nhபருள் (மு.வ):பணிவுடையவராக வாழ்வது பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
குறள் 124:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.பொருள் (மு.வ):தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின். பொருள் (மு.வ): அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.பொருள் (மு.வ):அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். பொருள் (மு.வ):பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.பொருள் (மு.வ):உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.பொருள் (மு.வ):முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.பொருள் (மு.வ):நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.








