குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.பொருள் (மு.வ): வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.பொருள் (மு.வ):ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
குறள் 374:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு. பொருள் (மு.வ): உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும். பொருள் (மு.வ): ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை. பொருள் (மு.வ): பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. பொருள் (மு.வ): கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். பொருள் (மு.வ): ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். பொருள் (மு.வ): அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.



