குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.பொருள் (மு.வ):அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
குறள் 400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.பொருள் (மு.வ):ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
குறள் 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.பொருள் (மு.வ):தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து. பொருள் (மு.வ): ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.பொருள் (மு.வ):கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்
குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.பொருள் (மு.வ):மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர். பொருள் (மு.வ): செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
குறள் 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.பொருள் (மு.வ):மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
குறள் 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
குறள் 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு..பொருள் (மு.வ): எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.








