• Wed. Apr 24th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 453:

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். பொருள் (மு.வ): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

குறள் 452:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.பொருள் (மு.வ): சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

பொது அறிவு வினா விடைகள்

குறள் 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். பொருள் (மு.வ): பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

குறள் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

குறள் 449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.பொருள் (மு.வ):கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

குறள் 447

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.பொருள் (மு.வ): கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

குறள் 446

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

குறள் 445

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.