• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 463

குறள் 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார் பொருள்(மு.வ) பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

குறள் 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல பொருள்(மு.வ) ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

குறள் 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் பொருள் (மு.வ) (ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌) அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

குறள் 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து பொருள் (மு.வ) மனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.

குறள் 458.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து பொருள்(மு.வ) மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.

குறள் 457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும் பொருள் (மு.வ): மனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.

குறள் 456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை பொருள் (மு.வ): மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.

குறள் 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும் பொருள் (மு.வ): மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.