குங்குமம் வைத்த தழும்பு மறைய
குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.
நகங்கள் வலுப்பெற
நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.
நகங்களை வெட்டும் முன்…
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கழுத்தில் கருமை நீங்க
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து…
பரு மறைய
லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.
முக சுருக்கம் மாற
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்க:
ஓட்ஸ் – 1 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் ஓட்ஸை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற…
அம்மை தழும்பு நீங்க…
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.
கைகளை வறட்சியின்றி வைக்க…
கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து…
தேவையற்ற முடிகளை அகற்ற
அழகு குறிப்பு: ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப்பகுதியில் தடவி 20-25…