• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..!

Byதரணி

Dec 7, 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 120 பேர் மீது வழக்கு பதிவு, 55 கடைகளுக்கு சீல், ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து கடைகளில் சோதனை நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது 120 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து 450 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 55 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்