• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டினால் வழக்கு…

Byகாயத்ரி

Dec 24, 2021

உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சி கடையில், ஆடு, கோழிகள் வெட்டுவதாக கூறி அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.

தொடர்ந்து, உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்றவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இறைச்சி கடைகளில் உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிகளை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.