மதுரையில் தூக்கத்தில் கார் ஓட்டி காவலர் சோதனைச் சாவடிக்குள் புகுந்து விபத்து – காவலர் ஒருவர் படுகாயம்
மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற பொறியாளர் பயணத்தின்போது தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பின் மீது மோதி, சோதனை சாவடிக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில், சோதனை சாவடி முழுமையாக சேதமடைந்த நிலையில் பணியிலிருந்த காவலர் மகேந்திரன் என்பவருக்கு தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
மதுரையில் சோதனை சாவடிக்குள் புகுந்த கார் – காவலர் படுகாயம்
