• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜய்காந்துக்கு நாளை நினைவேந்தல் கூட்டம்..!

Byவிஷா

Jan 18, 2024

நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு நாளை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் நாளை 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட முக்கிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த நினைவேந்தல் கூட்டத்திலும் நடிகர் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.