• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு.., அனைத்துக் கட்சியினர் அஞ்சலி..!

ByG.Suresh

Dec 28, 2023

சிவகங்கையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆன விஜயகாந்த் இன்று காலை காலமானார் அவரது மறைவு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்நிலையில் சிவகங்கையில் தேமுதிக சார்பில் அனைத்து கட்சியினர் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை ராமச்சந்திர பூங்காவில் இருந்து அனைத்து கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி வீதி மரக்கடை வீதி, அரண்மனை வாசல் வழியாகசண்முகராஜா கலையரங்கம் அருகில் அமைக்கப்பட்டிருந்த விஜய்காந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். நகர் தேமுதிக ஏற்பாடு செய்த இருந்த மௌன ஊர்வலத்தில் திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் அதிமுக சார்பில் நகரசெயலாளர் என்.எம். ராஜா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சண்முகராஜன் கவுன்சிலர்கள் மகேஷ் விஜயகுமார் அமுமுக கவுன்சிலர் அன்புமணி உள்ளிட்ட பாஜக உதயா கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சிகளும் இந்த மௌன ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சௌந்தர்ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர அவைத் தலைவர் மாரிமுத்து, நகர பொருளாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.