• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் அமர முடியாது.. மசோதா அறிமுகம்

ByA.Tamilselvan

Jan 13, 2023

தமிழ்மொழியில் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப்பணிகளில் அமரமுடியாத வகையில் டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரைத்துரைத்தார். அதில் பேசிய அவர் , “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை 2006ல் கருணாநிதி கொண்டு வந்தார். .
தமிழ்நாட்டில், தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது. 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை இயற்றி, மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார் கலைஞர். அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும். தமிழ்மொழியில் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப்பணிகளில் அமரமுடியாத வகையில் டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழியில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பத்தாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.