• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக மனு அளித்த வேட்பாளர்கள்..!

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சிநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் திமுக, அதிமுக,மக்கள் நீதி மையம்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,எஸ்டிபிஐ,பாரதிய ஜனதா கட்சி,கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று காலை முதல் பொள்ளாச்சி நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி களிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்,அதிமுக சார்பில் நகரச் செயலாளர் வீ கிருஷ்ணகுமார் தலைமையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மேலும் திமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதமாக அடுத்து ஆறாவது வார்டுடில் திமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அவசரமாக மனு தாக்கல் செய்தார்,ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி 15 வார்டுகளில் பகுதியில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, சுயேச்சைகள் வேட்பாளர்கள் வேட்புமனு படிவங்கள் பூர்த்தி செய்ய டேபிள் சேர் இல்லாததால் தரையில் உட்கார்ந்து படிவங்களைப் பூர்த்தி செய்தனர், சுளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் அதிமுக 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர், பொள்ளாச்சி நகராட்சியின் நுழைவாயிலில் காவலர்களுக்கு எவ்வித அடிப்படை வசதி இல்லாததால் காவலர்கள் மிகவும் சிரமப்படுவதாக காவலர்கள் தெரிவித்தனர்.