• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர் -வீடியோ

ByA.Tamilselvan

Jan 16, 2023

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஜஸ்டீன் ட்ரூடோவும் ஒருவராக இணைந்து தனது வாழ்த்துகளை தமிழ் மொழியில் தெரிவித்துள்ளார்.
“கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். நான்கு நாள் நடைபெறும் இந்த விழாவின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி இயற்கைக்கு நன்றி செலுத்துகிறார்கள். பொங்கல், பாலில் வேக வைத்த அரிசியுடன் இனிப்பு அல்லது உப்பு சேர்த்து செய்யப்படும் பாரம்பரிய உணவாகும்.
எங்கள் குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் வேண்டி எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்” என தனது வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.