• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட சி.விஜயபாஸ்கர்..,

Byமுகமதி

May 24, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவுடன் சென்னை சென்ற அவர் இன்று அதிகாலை விமான மூலம் விராலிமலை வந்தடைந்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்தனர். பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் சி விஜயபாஸ்கர் சட்டமன்றத் தொகுதி பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அப்பகுதி பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.