• Fri. May 3rd, 2024

மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் பேருந்துகள்..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 16 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. 16 பணிமனைகளில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் என 900 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 5,200 ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது, மதுரை மண்டலம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமையகத்தில் உள்ள போக்குவரத்து பனிமலையில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன தற்ப்போது வரை 39க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் வெளியே செல்கின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அண்ணா தொழிற்சங்கம் சி ஐ டி யு தொழில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அதிகாலை 4 மணிக்கு பணி மனை முன்பு 100க்கும் மேற்ப்பட்டோர் வேலைநிறுத்த  போரட்டத்தில் ஈடுப்பட்டு போராட்டக்காரர்கள் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று   பணிமனை முன் நின்று தெரிவித்து வந்தனர். இதனால் அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால்  வாக்குவாதம் ஏற்ப்பட்டது. போருந்துகள் இயங்ககூடாது என்று போராட்டகாரர்கள் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் முழுவதும் முதல் ஸ்பிட்ட்டில் 177 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் யூனிஃபார்ம் இல்லாமல் இயக்கிய பேருந்துகளை தடுத்து நிறுத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது எனினும் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *