திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து. இதை பார்த்து அலறி அடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து (TN57N2477) வந்தது. பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அரசு பேருந்தின் இஞ்சின்-ல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனை அறிந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு தங்களது உடமைகளுடன் கீழே இறங்கி ஓட தொடங்கினார். உடனடியாக பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பணியாளர்கள் மாநகராட்சி குடிநீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை பேருந்தின் மீது ஊற்றி தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





