• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குடும்ப தகராறில் தம்பியை அண்ணன் வெட்டி படுகொலை!!

ByP.Thangapandi

Nov 15, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, லாரி ஓட்டுநரான இவர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்று 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.,

தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க கோரி தனது தந்தை போஸ் உடன் அடிக்கடி தகராறு செய்து வந்த ராஜபாண்டி, நேற்று நள்ளிரவு வழக்கம் போல ஏற்பட்ட தகராறில் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.,

இது குறித்து அறிந்த ராஜபாண்டியின் அண்ணன் செல்லப்பாண்டி தந்தையை தாக்கியதை தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்ட போது, தம்பி ராஜபாண்டி, அண்ணன் செல்லப்பாண்டியை அரிவாளால் தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.,

இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தன்னை தாக்கிய தம்பியிடமிருந்து அரிவாளை பறித்து தம்பி ராஜபாண்டியை தலை பகுதியில் பலமாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அண்ணன் செல்லப்பாண்டியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,