• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வரதட்சணை கொடுக்க முடியாததால் முறிந்த காதல்

பிரபல நடிகையும் இயக்குநருமான ஜெயசித்ராவை திருமணம் செய்துகொள்ள முன்னாள் கதாநாயகன் ஒருவர் வரதட்சணை கேட்ட சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


1970-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசித்ரா. குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழைக் காட்டிலும் தெலுங்கில் கோலோச்சினார்.

கடந்த 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இந்த படத்தில் நடித்த சுதாகரை காதலித்து வந்துள்ளார் ஜெயசித்ரா. அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.


ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின்பு ஜெயசித்ரா 1983ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அம்ரீஷ் என்ற மகன் இருக்கிறார். அம்ரீஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக உள்ளனர்.


இந்நிலையில் ஜெயசித்ரா மற்றும் சுதாகருக்கு இடையில் நடந்த காதல் முறிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் பல லட்சம் வரதட்சணை வேண்டும் என்று ஜெயசித்ராவிடம் சுதாகர் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இருவரும் திருமணம் செய்யாமல் விலகியதாக தற்போது தெரியவந்துள்ளது.

பிற்காலத்தில் சினிமா கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் ஜெயசித்ரா கோலோச்சினார். தற்போது கூட பொன்னியின் செல்வன் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நடிகர் சுதாகர் தன்னுடைய குடிப்பழக்கத்தால் திரைவாழ்க்கையையே தொலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.