• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாய்ப்பால் சேமிப்பு வங்கி – கலெக்டர் சங்கீதா

ByKalamegam Viswanathan

Apr 25, 2025

ரோட்டரி சார்பில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி கலெக்டர் சங்கீதா தொடங்கி வைத்தார்.

மதுரை ரியோ மருத்துவமனையில், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தொடங்கி வைத்தார்.

ரோட்டரி கிளப் இன்டர்நேஷனல் மற்றும் தேவி கிராப் சயின்ஸ் நிதி பங்களிப்புடன் ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோபொலிஸ் சார்பாக, மதுரை ரியோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கருவிகளுடன் கூடிய தாய்ப்பால் சேமிப்பு வங்கி திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தினை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திறந்து வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசும்போது,

“இன்றைய சூழலில் மக்களுக்கு மிகவும் அவசியமான மற்றும் உன்னதமான திட்டம். இந்த தாய்ப்பால் சேமிப்பு வங்கி எண்ணற்ற உடல் நலிவுற்ற குழந்தைகளுக்கு பயனளிக்கும். பொதுமக்களுக்கு இந்த மையத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தாய்ப்பால் தானம் வழங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு தாயாக அனுபவரீதியாக என்னால் இதை உணர முடியும்” என்று பேசியவர், தாய்ப்பால் சேமிப்பு வங்கி செயல்படுவதற்கு ரியோ மருத்துவமனையை தேர்வு செய்த ரோட்டரி நிர்வாகிகளையும் பாராட்டினார்.

ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோபொலிஸ் தலைவர் பாண்டித்துரை பேசும்போது, “இது ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பு. தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்ய விரும்புவர்களுக்கும் இணைப்பு பாலமாக இந்த மையம் செயல்படும்” என்றார்.

இந்நிகழ்வில் மையம் அமைய இன்றியமையாத பங்களிப்பு செய்த தேவி கிராப் சயின்ஸ் சேர்மன் ரோட்டரி முன்னாள் ஆளுநர் தீனச்சந்திரன், ரியோ மருத்துவமனை சேர்மன் டாக்டர் சரவணன், துணை ஆளுநர் கலைராஜன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், சுரேந்திரன், உதவி ஆளுநர்கள் பழனி தாஸ், அருள்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் செயலாளர் டாக்டர் வாசன் நன்றி கூறினார்.