• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.வை உடைப்பது திராவிட
அரசியலுக்கு ஊறுவிளைவிக்கும்
திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க.வினர் நிறைய காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. நகைச்சுவை செய்து, அவர்களே சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.
தமிழ்நாட்டை குறி வைத்து உள்ள பா.ஜ.க. இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள். காசியில் தமிழ்சங்கம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க. தற்போது 4 குழுக்களாக சிதறி இருப்பது அவருக்கு செய்யும் துரோகம். ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் துரோகம். அ.தி.மு.க.வை உடைப்பது, அக்கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாடு திராவிட அரசியலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். பா.ஜ.க. அதை பயன்படுத்தும் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.