கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவறாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க, 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.