• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு.., குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…

ByKalamegam Viswanathan

Dec 19, 2023

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமம் காமராஜர் தெருவில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் தெருக்களில் வீணாகி வருகிறது மேலும் குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் கழிவு நீருடன் கலந்து மீண்டும் குழாயிற்குள் செல்வதால் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் இந்த குடிநீரை அருந்தும் மதுரை மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது குறித்து மதுரை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக முள்ளிப்பள்ளம் கிராமத்திலும் தெருக்களில் குடிநீர் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் ஆகையால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.