• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி?..

By

Aug 18, 2021

டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இங்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வல்லுனர்கள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அங்கு டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லுனர்கள் பரிந்துரைக்குபின்னர் எப்.டி.ஏ. என்றுஅழைக்கப்படுகிற அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த வாரம் தனது ஒப்புதலை அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பைசர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.