• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 10, 11ல் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டிற்கு முன்பதிவு..!

Byவிஷா

Jan 9, 2024

வருகிற ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், மதுரை மாவட்டம், பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு வருடமும் பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பங்கேற்கும் காலை மற்றும் வீரர்கள் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் அயனரசயi.niஉ.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.