• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..,

ByS. SRIDHAR

Apr 2, 2026

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கொண்ட குழு மோப்பனாய் உதவியுடன் நீதிமன்றத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும் வழக்கம்போல் நீதிமன்றம் செயல்பாடுகள் நடைபெற்று கொண்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக முக்கியமான இடங்கள் நீதிமன்றங்கள் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் சர்வ சாதாரணமாக இமெயில் மூலமாக வந்து கொண்டுள்ளது மிரட்டல் வந்தவுடன் காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்வதில் அது பொருளை என்பது தெரியவந்து சைபர் கிரைம் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு வெடிக்க உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக கடிதம் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உள்ளிட்ட கருவிகளோடு நீதிமன்ற வளாகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையில் வெடிகுண்டும் சிக்கவில்லை.

அது புரளி என்பது தற்போது தெரியவந்துள்ளது இருப்பினும் இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் மட்டுமல்லாது வழக்கு விசாரணையும் எந்தவிதமான தடங்கலமின்றி நடைபெற்று வருகிறது.