• Mon. Jan 20th, 2025

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Byவிஷா

Mar 1, 2024

சென்னை தலைமைச் செயலகத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக விரைந்து சென்ற, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சென்னை தலைமை செயலகம் முழுவதும் இன்று காலை முதல் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள பேரவை கூடம் அமைச்சரவை முக்கிய அறைகள், வெளிப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தலைமை செயலகம் முழுவதும் பாதுகாப்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டது. எனவே, சென்னை தலைமை செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மேலும், வேறு எதும் காரணங்களுக்காக அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.