

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் கலவரத்திற்கு அடிப்படை.
மணிப்பூரில் உள்ள பூர்வீக குடிகளில் பழங்குடி மக்களில்,மலைவாழ் பழங்குடி இனத்தவர்களான ‘குக்கி’ மற்றும் ‘நாக’ இன் மக்கள் ஆட்சியமைப்பிலும் நிலவுடைமை விவகாரங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர்.இதே நேரத்தில் அங்கு வசிக்கும் ‘மெய்தீன்’ மக்களுக்கு எஸ்டி பிரிவில் உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
வசதியான நகர்புற மெய்தின் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணை த்தால் தங்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களால் (மெய்தீன்) பறிக்கப்படும் என்பது குகி,நாக இனத்தவர்களின் நியாயமான அச்சமாக உள்ளது.
நாங்கள் (குகி,நாக) வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி,எங்களை வெளியேற்ற மெய்தின் இன மக்கள் முற்படுவார்கள் என்பதே பிரச்சனைக்கு முக்கிய காரணியாக உள்ளது.
மணிப்பூர் மக்கள்தொகையில் கிறித்தவர்கள் பெரும்பான்மை என்ற நிலையிலும் இந்த போராட்டம் தீர்த்து போகமல் ஒரு கூட்டம் பாதுகாக்கிறதோ என்ற அச்சத்தையும் கிறிஸ்தவர் ஐக்கியப் பேரவை பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் வெளிப்படுத்தியவை.
இந்தியா ஒரு ஜனநாயக மதசார்பற்ற நாடு ஆனால் தற்போது அதன் இறையாண்மைக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் உள்ள கிறித்தவ மக்கள் பல்வேறு விதங்களில் கொடுமைகளுக்கு ஆளாகி வருவதும்.கிறிஸ்தவ தேவாலயங்கள் 200_க்கும் அதிகமான எண்ணிக்கையில் சிதைக்கப்பட்ள்ளதாக பத்திரிகை, ஊடகங்களில் வெளியான செய்திகள் கண்டு வேதனை அடைகிறோம்.
மணிப்பூரின் ஆளுநர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற உரிமையில் அவரிடம் கிறிஸ்தவர் ஐக்கியப் பேரவை சார்பில் நாங்கள் வைக்கும் கோரிக்கை மதம் கடந்து மனித பண்புகள் அவர்களது வழிபாட்டு உரிமை,உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் முயற்சிக்கு துணை நில்லுங்கள்.ஒரு சக தமிழர் என்ற உரிமையில் தனிப்பட்ட முறையிலும்.இறையாண்மைக்கு எதிராக நடைபெறும் மத வெறி தாக்குதலை ஜனநாயக உணர்வுடன் மத்திய அரசு அமைதிக்கான வழிகளை காண்பதில் விரைந்து செயல் பட்டு மனித உயிர்களை காப்பதில் கவனம் செலுத்துங்கள் என குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என ஆயர் வின்சென்ட் பவுலோஸ் மற்றும் கோட்டார் மறைக்கப்பட்ட ஆயர் நசரேன் சூசை கூட்டாக கோரிக்கை வைத்தார்கள்.

