• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனியில் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம்

Byvignesh.P

Jul 1, 2022

தேனியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் திண்டுக்கல் மண்டல தலைவர் ஆனந்தன் தலைமையில், 17ம் ஆண்டு பேரவை நடைபெற்றது. முன்னதாக மூத்த உறுப்பினர் நாராயணசாமி பேரவை கொடி ஏற்றி வைக்க, கம்பம் கிளை தலைவர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்ற மாநில பொதுச் செயலாளர் கர்சன் சிறப்புரை நிகழ்த்தினார்.


நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் செயலாளர் ராமமூர்த்தி தேனி மாவட்ட சிஐடியூ செயலாளர் ராமச்சந்திரன் கோவை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஒரு நல்ல அமைப்பின் துணை பொதுச்செயலாளர் சேதுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார் .
நிகழ்ச்சியில் திண்டுக்கல் தேனி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.