தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது

இந்த கல்லூரி வளாகத்தில் தேசிய நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது

இந்த ரத்ததான முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து ரத்ததானம் வழங்கினர்
முன்னதாக இந்த ரத்த தான முகாமை கல்லூரி முதல்வர் அருணா தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான ரத்த தானம் வழங்கினர்

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நவீன், தேசிய நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரசன்னகுமாரி, விக்னேஷ, ராதிகா, ரத்த வங்கி மருத்துவமனை அலுவலர் மருத்துவர் பிரியா, பொது மருத்துவ துறை உதவி பேராசிரியர் மருத்துவர் அன்புக்குமார், மற்றும் பேராசிரியர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்




