விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட அணி சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் ஸ்ரீ காளி ஸ்ரீ கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இரத்த தானத்தின் முக்கியத்துவம் சோகை, பாதிப்பு சரியான உடல் எடை, மனித உடலுக்கு தேவையான ரத்த அளவு, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் 241 மாணவ மாணவிகள் பங்கேற்றனர் 121 அலகு ரத்தம் சேகரிக்கப்பட்டது.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்,
முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மணிமுத்து, மாரிஸ்வரன், பொற்கொடி ஆகியோர் செய்து இருந்தனர்.