சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க இளைஞர் அணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (24) தனியார் சட்டகல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் மற்றும் பா.ஜ.க.வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் காரமராஜபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் தனது வீட்டிற்க்கு அழைத்து சென்றவர் பெற்றோர் உதவியுடன் அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மூளை சலைவை செய்தவர் சிறிது சிறிதாக முப்பது லட்சம் ரூபாய் பணத்தையும், 15 சவரன் தங்க நகைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழரசன் வைத்திருந்த லேப்டாப்பை அப்பெண் சோதனை செயத போது இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழரசனிடம் கேட்ட போது அப்பெண்ணையும் தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்து வைத்ததாக மிரட்டிய அவர் மீண்டும் பணத்தை பறித்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் அப்பெண் தெரிவித்ததால் சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது, தமிழரசனை கைது செய்த போலீசார் லேப்டாப் மற்றும் செல்போனில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கபடடது. மேலும் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண்ணிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஐந்து லட்சம் ரூபாய் வரை பணத்தை மிரட்டி பறித்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தமிழரசனால் எத்தனை பெண்கள் ஏமாற்றபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.