

கழுகுமலையில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கணேஷ், கலையரசிகாந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்தும், புதிதாக வீடு கட்டுவதற்கு வழங்குகின்ற அனுமதியில் அரசு நிர்ணயித்த தொகை யை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை கண்டித்தும், வாரம் 1 முறையாவது சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். கழுகுமலை – பழங்கோட்டை சாலையை அகலப்படுத்த வேண்டும். குமாரபுரம் கிரமாத்திற்கு வடக்கு பகுதியில் இரண்டு ஓடைகள் இணையும் இடத்தில் உள்ள தாழ்வான தடுப்பணையை உயர்த்தி கட்டி விவசாயம் மேம்பட செய்ய வேண்டும். கழுகுமலை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு குளியல் வசதி மற்றும் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் மாரியப்பன், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, தகவல் பிரிவு விஜயபழனி, சிறுபான்மை யினர் அணி பிரான்சிஸ், வழக்கறிஞர் விஜயகுமார், சிவகுருநாதன், விஸ்வநாகராஜன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
