செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறது. பிரதமா் விமான நிலைய வரவேற்பை முடித்துவிட்டு, உடனடியாக தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில்,பிரதமா் 25 நிமிடங்கள் ஓய்வு எடுப்பதாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் தாமதத்துக்கு காரணம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, பிரதமரின் தனி விமானம் தாமதமாக புறப்பட்டதால், விமானம் தாமதமாக சென்னைக்கு வருகிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் உலக ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சற்றுமுன் சென்னை வந்தடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.