• Fri. Apr 26th, 2024

அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது

Byகுமார்

Jul 4, 2022

பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம், அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு சார்பில் 100வது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின விழா மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில கூட்டுறவு பிரிவு தலைவருமான மாணிக்கம் தலைமையில், பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பன்னாட்டு கூட்டுறவு தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் பேசுகையில்,
கூட்டுறவு திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக மாயை ஏற்படுத்தி தவறான செய்தியை சொல்லுகின்றனர்.நியாயவிலைக்கடைகளால் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசியை தாங்கள் சொந்த நிதியை செலவழித்து வழங்குவது போல மாநில அரசு பொய் கூறுகின்றனர்.விரைவில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் வரும்.ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்து கொள்வாரா?பாஜக ஒரு ஜனநாயக கட்சி. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.
ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,எதிர்பார்ப்போடு இருந்தவர்கள் தான் ஏமாந்து இருப்பார்கள். நான் எந்த எதிர்ப்பார்ப்போடும் கட்சியில் இருக்கவில்லை. ஒபிஎஸ் தனித்து விடப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு,அதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசினார்.
அதனைத்தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பேசுகையில்,சட்டமன்ற தீர்மானங்கள் குறித்து மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு அளித்த எந்த நோட்டீஸ்க்கும் மாநில அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை.
பாஜக ஈபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம் தருகிறதா என்ற கேள்விக்கு,பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம். பாஜகவை அண்ணாமலை திறம்பட வழிநடத்தி வருகிறார்.அதிமுக எங்கள் கூட்டணி கட்சி. அதிமுகவில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது.கூட்டுறவு துறையில் தவறுகள் நடந்தால் அதை பாஜக தட்டிக்கேட்கும்.தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் தோல்வியடைந்து விட்டது.தமிழகத்தில் நடைபெறும் எல்லா தவறுகளுக்கும் முன் ஒரு திமுககாரன் இருப்பான். கூட்டுறவில் சுண்டல், அரிசி, பருப்பு என்னனென்ன இருக்கோ எல்லாவற்றையும் திருடுகிறார்கள்.மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். திருடர்களை பிடிக்கவும், அரசுக்கு உதவவும் பாஜக இதனை செய்ய உள்ளோம்.கூட்டுறவு துறைகள் தமிழகத்தில் நஷ்டத்தையும், தோல்வியையும் அடைந்துள்ளது என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *