• Fri. Jan 24th, 2025

கிண்ணிக்கண்ணன்விளையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கிண்ணிகண்ணன்விளை, கோவில்விளை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
பூத் பொறுப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற வாக்குசேகரிப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் இ.எம்.ராஜா மற்றும் நிர்வாகிகள் தாமரை பிரதாப், சுரேஷ், இசக்கி முத்து, கனகராஜன், முத்து கிருஷ்ணன், சந்திரன், ராதா, கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.