• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சாலையில் அமர்ந்து பாஜகவினர் தர்ணா

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல அனுமதிக்கக் கோரி பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காந்தி சிலை வரை செல்ல அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை வரும், மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அனுமதிக்க முடியாது என கூறி காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.