2019 அதிமுக ஆளும் கட்சி.பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணிக்கு பதில்.
வேலுமணி , எடப்பாடி இடையே பழனிச்சாமி உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.
பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு.. இல்லை என்றால் ஒரு பேச்சு. அதிமுக கோவையில் அனைத்து எம்.எல் ஏ இருந்தும் ஏன் வெற்றி பெறவில்லை.
கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். பாஜகவிற்கு காலம் வரும் – தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம். திமுகவினர் ஆட்டுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள் . அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடன் அண்ணாமலை வாக்குவாதம். கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். அதிகளவில் பாஜக எஸ்.பி வேலுமணி அண்ணன் அரசியல் தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார்.
இணை அமைச்சர் பதவி ஏற்பதாக கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர்..
கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது. எஸ்.வி சேகர் யார் என்று எனக்கு தெரியாது. எங்களின் செய்ல்பாடு தான் 2 இலக்குகளில் வாக்கு வாங்கியுள்ளோம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும்…
அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும்.