• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விளம்பரம் செய்ய 30 நாளில் 30 கோடி செலவு செய்த பாஜக

Byவிஷா

Mar 4, 2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக கூகுளில் விளம்பரம் செய்ய 30 நாளில் 30 கோடியை செலவு செய்திருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஊடகங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கூகுளில் விளம்பரத்திற்கு 30 நாளில் ரூ.30 கோடி பாஜக செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வட இந்திய மாநிலங்களை குறிவைத்து இந்த ஊடக விளம்பரங்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன.
தேர்தலில் விளம்பரங்கள் மூலம் அரசியல் காட்சிகள் ஆதாயம் தேடும் வழக்கம் தற்போதைய காலங்களில் அதிகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.