• Fri. Jan 24th, 2025

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு – என்.ஐ.ஏ விசாரணை

Byவிஷா

Mar 4, 2024

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணையைத் தொடங்கி உள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டுவெடித்த வழக்கு விசாரணையில், சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி பெங்களூரு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை மாற்றம் செய்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.