• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக…

நான்கு மாநிலங்களான வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்த பாஜக.

காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களான ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், மூன்று சட்டமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், பாஜக மாவட்ட பொருளாளர் மற்றும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் தலைமையில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் முன் பட்டாசு வெடித்தும், அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மீனாதேவ், கவுன்சிலர் ரோசிட்டா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.