சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி காரைக்கால் பாரதியார் வீதியில் பாஜக அலுவலகம் அமைய உள்ள இடத்தின் முன் சுவாமி விவேகானந்தரின் திரு உருவப்படத்திற்கு பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.




