• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாரதிய ஜனதா கட்சி போலி இந்துத்துவா கட்சி -உத்தவ் தாக்கரே பேச்சு

ByA.Tamilselvan

May 15, 2022

பாஜக போலி இந்துத்துவா கட்சி ,அக்கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கூடியிருந்த இந்த மாநாட்டில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேசும் போது ..தாவுத் இப்ராகிம் பாரதிய ஜனதாவில் இணைவதாக சொன்னால் கூட ஏற்றுக் கொண்டு தேர்தலில் நிக்க சீட்டு கொடுத்து அமைச்சர் ஆக்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு நாட்டின் நிலைமை மிக ஆபத்தாக இருப்பதாக குற்றம் சாடினார்.
இப்போது ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி யாருமே பேசுவது இல்லை. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி போலி இந்துத்துவா கட்சி நாட்டை நரகத்துக்கு கொண்டு சென்றுவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒன்றிய அமைப்புகளை பயன்படுத்தி பொய் வழக்குகளை பதிந்து மராட்டிய மக்களை தொந்தரவு செய்தால் அமைதி காக்க மாட்டோம், தக்க பதிலடி கொடுப்போம், ஒருவர் கூட தப்ப முடியாது என்றும் உத்தவ் தாக்கரே காட்டமாக விமர்சித்தார்.