• Fri. Jan 17th, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு

Byதரணி

Feb 17, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது .

அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், இன்றைய தினம்(17.02.2023) மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்இன்று தை மாத உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. ஐயப்பா சேவா சங்கம் பாடசாலை மாணவர்கள் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள்,காவல்துறையினர் உண்டியல் என்னும் பணி ஈடுபட்டனர். உண்டியல் வருமானம் ரூ29,42,009/-(இருபத்து ஒன்பது லட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து ஒன்பது மட்டும்).தங்கம்— 0.170கி( நூற்றி எழுபது கிராம் மட்டும்). வெள்ளி—2.910கி(இரண்டு கிலோ தொள்ளாயிரத்து பத்து கிராம் மட்டும்).தகரம்—4.700கி (நான்கு கிலோ எழுநூறு கிராம் மட்டும்)செம்பு மற்றும் பித்தளை–9.800(ஒன்பது கிலோ எண்ணூறு கிராம் மட்டும்)திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.