• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உலகத்திலேயே பெரிய வாய்… கின்னஸ் சாதனை !!! -வைரல்வீடியோ

ByA.Tamilselvan

Sep 9, 2022

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் உலகத்திலேயே யாரும் திறக்காத அளவுக்கு வாயை திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை செய்ய பல புதிய முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச்சேர்ந்த ஐசக் ஜான்சன் என்ற இளைஞர் ஒரு வித்தியாசமான கின்னஸ்சாதனையை படைத்துள்ளார்.அதாவது உலகிலேயே யாரும் திறக்காத அளவுக்கு வாயை பெரியதாக (10செ.மீ) திறந்து சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை தன்னுடைய சாதனையை தானே முடியடித்துள்ளார்ஐசக். இவர் தன் வாயை முழுமையாக திறந்தால் 4 மெக்டொனால்டு சீஸ்பர்கர்களை வாய்க்குள் வைத்து அடைக்கலாமாம். அடேங்கப்பா எவ்வளவு பெரிய வாய்….