
நாளை மறுநாள் துவங்க உள்ள பிக்பாஸ் – 6வதுசீசன் வீட்டின் தோற்றம் புதியதாகவும் அசத்தலாகவும் உள்ளது.
பிரபலமான பிக்பாஸ் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 6-வது சீனன் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.




இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 9-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் வரவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
