• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ்6-ஜனனியின் பேச்சை தடுத்த போட்டியாளர்கள்

ByA.Tamilselvan

Oct 19, 2022

பிக்பாஸ்6 சீசனில் இலங்கைபெண் ஜனனி பேசும்போது அதை தடுத்த போட்டியாளர்கள் பற்றிய சுவாரஸ்யாதகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6துவங்கி 1வாரத்திற்கு மேல் கடந்துள்ளது . நடிகர் கமல் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக தொகுத்து வழங்குகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு போட்டியாளர்களும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக இலங்கை பெண்ணானஜெர்மனியை சேர்ந்த மதுமிதா,லாஸ்லியா போன்றவர்கள் பங்கேற்று ரசிகர்களின் ஆதரவை பெற்றனர்.அதேபோல பிக்பாஸ் 6ல் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கதை யில் பேசிய ஜனனி “என்னை பார்ப்பவர்கள் நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதை பார்த்து எனக்கு எந்த பிரச்னையும் இருக்காது என நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை. நான் ஸ்கூல் படிக்கும்போதே குடும்பத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை” என அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே மற்ற போட்டியாளர்கள் சென்று பட்டனை அழுத்திவிடுகிறார்கள். அது தற்போது வந்திருக்கும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.