• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜு? பரபரப்பாகும் புகைப்படம்

Byadmin

Jan 16, 2022

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5ஐ வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது.

இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக உள்ளனர். பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், பைனலில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிப் பரிசுடன் ராஜூ நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும், 2வது இடத்தை பிரியங்கா, 3வது இடத்தை பாவனி, 4வது இடத்தை அமீர், 5வது இடத்தை நிரூப் ஆகியோர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன்-5 பைனல் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று (ஜன.,16) மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.