• Fri. Apr 26th, 2024

மன்மத லீலை நிழலும் நிஜமும் பொய் சொன்ன வெங்கட்பிரபு

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சென்னை 600028 என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு நகைச்சுவையின் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். மறைந்த கே.பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஆலம், ஹேமா சவுத்ரி, ஜெயப்பிரதா, ஒய் விஜயா மற்றும் பலர் நடிக்க 1976ம் ஆண்டில் வெளிவந்த படம் மன்மத லீலை பெண்கள் மீது மோகம் கொண்ட நாயகனாக கமல்ஹாசன் நடித்த படம். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் மிகவும் பொருத்தமான படம். அந்தப் படத்தின் தலைப்பில் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

வெங்கட்பிரபுவின் 10வது படமாக உருவாக உள்ள இப்படத்தை தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்க உள்ளார்களாம். சென்னை 600028 முதல் மாநாடு படம் என வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய 9 படங்களுக்குமே யுவன்சங்கர்ராஜாதான் இசையமைத்துள்ளார். ஆனால், இந்த படத்திற்கு முதன்முறையாக யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவில்லை. அவருக்கு பதிலாக வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி நடிகர் மட்டுமின்றி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் வெங்கட்பிரபுவின் குயிக்கி அதாவது வெங்கட்பிரபுவின் விரைவுப் படம் என அவரே குறிப்பிட்டுள்ளார்.மன்மதலீலை படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் அறிவிப்புக்கு அசோக்செல்வனும் நன்றி தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபுவின் ரசிகனாக இருந்து அவருடன் பணியாற்றுவதற்கு நன்றி. படத்தின் போஸ்டரில் அசோக் செல்வன் ஒருபுறம் முத்தங்கள் கொண்ட முகத்துடனும், இன்னொரு முகத்தில் கோபத்துடன் காயத்துடன் தாடியுடன் இருப்பது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைப்பதற்கும், வெங்கட்பிரபுவின் விரைவுப்படம் என குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் என்ன காரணம் என விசாரித்தபோது மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்கிற சூழல் நிலவி வந்தபோது முதல்பிரதிஅடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம்தான் மன்மத லீலை படம் முடிந்து எட்டு மாதங்களாகிறது பேசிய அடிப்படையில் முதல் பிரதிக்கான பாக்கிப்பணத்தை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அறிவிப்பும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *